சீன ராணுவ பிரதிநிதிகள் இந்தியப் பயணம்: சீனா-இந்தியா ஆலோசனை

மதியழகன் 2018-05-31 16:07:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ராணுவ பிரதிநிதிகள் இந்தியப் பயணம்: சீனா-இந்தியா ஆலோசனை

சீன மக்கள் விடுதலை படையின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பிரதிநிதிக் குழு விரைவில் இந்தியாவில் பயணம் செய்வது குறித்து, சீனாவும் இந்தியாவும் தற்போது தொடர்பு மேற்கொண்டு வருகின்றன என்று சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரென் குவொசியாங் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையே, எல்லைப் பிரச்சினை தொடர்பான வெவ்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றமானது,  எல்லைப் பகுதியின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், எல்லைப் படையினர்களிடையேயான நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும். பிற ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பும் ஆலோசிக்கும் என்று ரென் குவொச்சியாங் குறிப்பிட்டார்.

சீன-இந்திய படைகளுக்கு இடையேயான உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுப் படைகளின் சீரான வளர்ச்சியை முன்னெடுத்து, எல்லைப் பகுதியின் அமைதி, பிராந்திய அமைதி மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றைக் கூட்டாக பேணிக்காக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்