எஸ்சிஓவின் செய்தி ஊடக உச்சிமாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்

வாணி 2018-06-01 13:54:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எஸ்சிஓவின் செய்தி ஊடக உச்சிமாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது செய்தி ஊடக உச்சிமாநாடு ஜுன் முதல் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இம்மாநாட்டல் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகத் துறை நண்பர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு நாடுகள் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்வதற்கும், மக்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரிப்பதற்கும் செய்தி ஊடகம் முக்கியமானதொரு பாலமாகும் என்று அவர் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆற்றலை அதிகரிப்பதற்கு இவ்வுச்சிமாநாடு செயல் ரீதியிலான பங்கினை ஆற்றுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்