பொருளாதார பேச்சுவார்த்தை குறித்து சீனாவின் அறிக்கை

கலைமணி 2018-06-03 14:43:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து சீனாவின் அறிக்கை

ஜுன் 2, 3 ஆகிய நாட்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான லியு ஹே தலைமையிலான சீன-அமெரிக்க பன்முக பொருளாதாரப் பேச்சுவார்த்தையின் சீனப் பிரதிநிதிக் குழு, அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ரோஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிக் குழுவுடன் இணைந்து, பெய்ஜிங்கில் இரு நாட்டுப் பொருளாதார வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு நடத்தியது. வாஷிங்டனில் இரு நாடுகள் எட்டியுள்ள பொது கருத்துகள் குறித்து வேளாண்மை, எரியாற்றல் முதலிய துறைகளில் இருதரப்பினரும் சீராகப் பரிமாற்றம் மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை எட்டியுள்ளனர். இது குறித்து விரிவான அம்சங்களை இருதரப்பினரும் உறுதி செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்