சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சிப் போக்கு: சீனா விருப்பம்

வான்மதி 2018-06-05 09:47:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சிப் போக்கு: சீனா விருப்பம்

சீன-இந்திய தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்தை வழிகாட்டலாகக் கொண்டு இருநாட்டு உறவில் காணப்பட்ட ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கை இந்தியாவுடன் இணைந்து பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் 4ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஷங்கரிலா பேச்சுவார்த்தையில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரை பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், இருநாட்டுறவு பற்றி இந்திய தலைமை அமைச்சர் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்தை சீனா பாராட்டுகிறது என்று ஹுவா சுன்யிங் கூறினார்.

மேலும், கடந்த ஏப்ரல் திங்கள் இறுதியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் மோடியும் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை வெற்றிகரமாக நடத்தினர். அதில் முக்கியமான பல ஒத்த கருத்துகள் எட்டப்பட்டன. இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை முன்னேற்றி, கருத்துவேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, இருநாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்