3ஆவது சுற்று சீன-ஜப்பான-தென் கொரிய வடதுருவ விவகாரத்தின் பேச்சுவார்த்தை

இலக்கியா 2018-06-09 12:06:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

3ஆவது சுற்று சீன-ஜப்பான-தென் கொரிய வடத்துருவ விவகாரத்தின் பேச்சுவார்த்தை

வடதுருவ விவகாரத்துக்கான 3ஆவது சுற்று சீன-ஜப்பான-தென் கொரிய உயர் நிலை பேச்சுவார்த்தை 8ஆம் நாள் ஷாங்காயில் நடைபெற்றது. வடதுருவ மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், உலகிற்கு விளைவித்துள்ள சவால்களையும் பாதிப்பையும், இந்த மூன்று நாடுகளும் உணர்ந்து, அம்மண்டலத்தின் அமைதியான தொடரவல்ல வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்ற விருப்பம் தெரிவித்துள்ளன. சீன அரசு இவ்வாண்டு ஜனவரி திங்கள் வெளியிட்ட சீனாவின் வடதுருவக் கொள்கை என்ற வெள்ளையறிக்கை வரவேற்கப்பட்டது. அத்துடன் இந்த மூன்று நாடுகள், வடதுருவ அறிவியல் ஆய்வின் ஒத்துழைப்புக்கு முன்னுரிமையை அளிக்க ஒப்புக் கொண்டனர். இப்பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்பு, 3 நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்