எஸ்சிஓ செய்தியாளர் கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கின் உரை

வாணி 2018-06-10 18:38:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எஸ்சிஓ செய்தியாளர் கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கின் உரை

எஸ்சிஓ செய்தியாளர் கூட்டத்தில் நடப்பு உச்சிமாநாட்டின் சாதனை அறிமுகம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டம் 10ஆம் நாள் மாலை பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இக்கூட்டத்துக்குப் பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செய்தியாளர்களை இணைந்து சந்தித்தனர். இக்கூட்டத்தின் சாதனையை ஷி ச்சின்பிங் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்தார். அவர் பேசுகையில்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டுக்கிணங்க அண்டை நாட்டு நட்புறவை வளர்த்து, பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இப்பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக நாடுவதென பல்வேறு தரப்புகளும் இசைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

உலகம் பல துருவமயமாக்கம், பொருளாதார உலக மயமாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியுடன், பல்வேறு நாடுகளுக்குமிடையேயான உறவு மேலும் நெருக்கமாகி வருகிறது என்றும், கூட்டு அறைக்கூவல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் போது, எந்த ஒரு நாடும் அதனை எதிர்கொள்ளவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, சரிசம நிலையிலான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, திறந்த மனத்துடன் கூட்டு வெற்றி மற்றும் பகிர்வு தன்மை வாய்ந்த கூட்டாளியுறவை ஆழமாக்குவதன் மூலம் தான், நிலையான அமைதி மற்றும் வளர்ச்சியை நனவாக்க முடியும் என்று ஷி ச்சின்பிங் கருத்து தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்