ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை சீனா கருத்துக்கள்

2018-06-11 09:32:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை சீனா கருத்துக்கள்

ஈரான் அணு ஆற்றல் பற்றிய பன்முக உடன்படிக்கை, பல தரப்புவாதத்தின் முக்கிய சாதனையாகும். மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தையும், சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்புமுறையையும் பேணிக்காப்பதற்கு இது துணை புரியும். இந்த உடன்படிக்கை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 10ஆம் நாள், ட்சின் தாவ் நகரில், ஈரான் அரசுத் தலைவர் ரௌஹானியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது தெரிவித்தார்.

அமைதியான முறையில் சர்வதேச சர்ச்சையையும் பிரச்சினையையும் தீர்ப்பதில் சீனா ஊன்றி நின்று வருகிறது. ஈரானுடன் சேர்ந்து, பல தரப்பு ஒத்துழைப்பு என்ற கட்டுகோப்புக்குள், புதிய ரக சர்வதேச உறவை உருவாக்க சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையை பயனுள்ள முறையில் நடமுறைப்படுத்த ஈரான் விரும்புகிறது என்று ரௌஹானி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்