அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதில்

2018-06-16 10:19:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் [File photo: fmprc.gov.cn]

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் [File photo: fmprc.gov.cn]

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களில் கூடுதல் சுங்க வரி வசூலிப்புக்குரிய பொருட்களின் பெயர் பட்டியலை ஜுன் 15ஆம் நாளிரவு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டது.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் பதில் கூறியதாவது சீனா, வர்த்தகப் போரை நடத்தப் போவதில்லை. ஆனால், அமெரிக்காவின் இச்செயலுக்கு வலிமையான பதில் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு, நாட்டு நலனையும் மக்களின் நலனையும் உறுதியாக பேணிக்காக்கும். பொருளாதார உலகமயமாக்கத்தையும் பலதரப்பு வர்த்தக முறைமையையும் உறுதியாக பாதுகாக்கும் வகையில், சீனா உடனடியாக ஒரே அளவிலான வரி வசூலிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்கு முன் இருதரப்பும் கலந்தாய்வு செய்து உருவாக்கியிருந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் இவ்வறிவிப்பினால் செல்லுபடியாகாத நிலையை அடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்