அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரின் பதில்

2018-06-16 10:21:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிகத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர்[File photo: mofcom.gov.cn]

சீன வணிகத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் [File photo: mofcom.gov.cn]

சீன வணிகத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், சீனா மீது அமெரிக்கா 15ஆம் நாள் மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பதில் அளித்தார். அவர் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக பல சுற்று கலந்தாய்வுகளை மேற்கொண்டு, கருத்து வேற்றுமைகளைத் தீர்க்கவும் இருதரப்பும் கூட்டு நலன் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த கருத்தொற்றுமையை அமெரிக்கா கருத்தில் கொள்ளாமல் வர்த்தகப் போரை மேற்கொண்டுள்ளது. சீனாவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் செயல்பாடு இருதரப்பின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உலக வர்த்தக ஒழுங்கமைவுக்கும் பங்கம் ஏற்படுத்தும். இதனால் அமெரிக்காவின் நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்