அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க சீனா முடிவு

2018-06-16 10:44:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 5,000 கோடி டாலர் மதிப்புள்ள 659 வகைகளான பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் தெரிவித்துள்ளது. வேளாண்மை, வாகனம் உள்ளிட்ட 3,400 கோடி டாலர் மதிப்பிலான  545 வகைகளான பொருட்கள் மீது, வரும் ஜுலை 6ஆம் நாள் முதல் வரி வசூலிக்கப்படும். பிற பொருட்களின் மீது வரி விதிக்கப்படும் தேதி பின்பு வெளியிடப்படும்.

கூடுதல் சுங்க வரி  வசூலிப்புக்குரிய பொருட்களின் பட்டியலை அமெரிக்க அரசு ஜுன் 15ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதன்படி, சீனாவில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் சுமார் 5,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும். இவற்றில், 3,400 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள், வரும் ஜுலை 6ஆம் நாள் முதல் வரி வசூலிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இச்செயல்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறிய்யுள்ளதோடு, சீன-அமெரிக்கக் வர்த்தக கலந்தாய்வில் எட்டப்பட்ட பொது கருத்துகளுக்குப் புறம்பானதாகவும் உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா மேற்கூறிய முடிவுகளை எடுத்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்