அமெரிக்காவுக்கு அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கும் சீனா

மதியழகன் 2018-06-16 14:08:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

25 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் பட்டியலை, அமெரிக்கா 15ஆம் நாள் வெளியிட்டது. இந்த பட்டியல், ஏப்ரல் திங்களில் முதல்கட்டமாக வெளியான பட்டியலைப் போன்றது. ஆனால்,  புதிய வரி நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதை அமெரிக்கா அறிவிக்கவில்லை.

அமெரிக்காவின் இந்தச் செயல், சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தகத்தை வளர்ப்பதிலும் இரு நாட்டுறவின் நீண்டகால வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் பங்காற்றி வரும் பல்வேறு துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர், இரு நாட்டு மக்களின் நலன்களை அதிகபட்சமாக பேணிக்காக்கும் வகையில், கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்று சுற்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையில் இரு தரப்புகளின் பொது நலன்கள் விரிவாகி,  சர்ச்சைக்குத் தீர்வு காணும் போக்கு படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒருதரப்பு செயலால், முன்பு இரு தரப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்  அவற்றின் மூலம் நிகழவிருக்கும் சாதனைகளும் பாதிக்கப்பட்டு காணாமல் போயுள்ளன.

அமெரிக்காவின் இத்தகைய செயலால், சீனா ஆச்சரியம் அடையவில்லை. ஏனென்றால், டிரம்ப் அரசின் நிரந்தரமற்ற செயல் மற்றும் அதன் உள்நோக்கம் ஆகியவற்றை சீனா ஏற்கனவே உணர்ந்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை வரி நடவடிக்கை உடனடியாக செயலுக்கு வரும் என்று அறிவிக்கவில்லை. சீனாவுக்கு அதிகபட்சமாக நிர்பந்தம் விதிக்க அமெரிக்கா முயல்கிறது. அதன் மூலம் அடுத்த கலந்தாய்வில் மேலதிக நன்மை பெற முடியும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

இருப்பினும், வர்த்தகப் போர், உலகின் கால ஓட்டத்திற்கு புறம்பானது. அது, பழையதகாவும், பின்தங்கியதாகவும், குறைவான பயனுடையதாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வர்த்தக போரில் ஈடுபட சீனா விரும்பவில்லை. ஆனால், இது குறித்து சீனாவிற்கு எவ்வித அச்சமும் இல்லை. அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு சீனா பதிலடி நடவடிக்கை எடுப்பது நியாயமானது, சட்டப்படியானது.

அமெரிக்காவின் ஒருதரப்பு வாதம் மற்றும் பாதுகாப்பு வாதத்தை எதிர்நோக்கி,  உலக நாடுகள் கையோடு கை சோர்த்து அதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் தான், பல்வேறு நாடுகளுக்கு பரவலாக நன்மை தரும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காக்க முடியும்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்