ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

மதியழகன் 2018-06-17 10:59:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா சனிக்கிழமை இரவு துவங்கியது. இவ்வாண்டு இந்த விழா ஜுன் 25ஆம் நாள் வரை நீடிக்கும்.இவ்விழாவில், சீனா மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். “ஜின் ஜுயே”பரிசுத் தேர்வுப் பணி மேற்கொள்ளப்படும். கூடுதலாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திரைப்பட விழாக் கூட்டமைப்பை நிறுவும் விழா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தலைப்பிலான திரைப்பட வாரம், வட்ட மேசைக் கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங் இந்த திரைப்பட விழாவை தொங்கி வைத்து உரை நிகழ்த்துகையில்

நடப்புத் திரைப்பட விழா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திரைப்பட ஒத்துழைப்பு முறைமையை மேம்படுத்தி, மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றி, கூட்டாளியை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் பெரிய அளவு மற்றும் அதிகச் செல்வாக்கு வாய்ந்த திரைப்பட விழாக்களில் ஒன்றாக, ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஜின்ஜுயே பரிசின் ஈர்ப்பாற்றல் உயர்ந்துள்ளது. உலகின் 108 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 3,447 படங்கள், இந்த பரிசுத் தேர்வுகளில் பங்கேற்றுள்ளன. இறுதியில், சீனா, அமெரிக்கா, போலந்து, ஈரான், டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளைச் சேர்ந்த 13 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜின்ஜுயே பரிசுகளுக்காக பேட்டியிடும். வரும் 24ஆம் நாள் இறுதிப் பரிசுப் பட்டியல் வெளியாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்