சீனாவில் மூங்கில் தொழில் வளர்ச்சி

வாணி 2018-06-19 16:22:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் மூங்கில் வகைகள் 10 ஆயிரத்துக்கும் அதிகமாகும். முழு நாட்டிலும் மூங்கில் வளர்ப்பு நிலப்பரப்பு உலகில் நான்கில் ஒரு பகுதி வகிக்கின்றது. மூங்கில் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 80 இலட்சத்துக்கும் அதிகமாகும். ஆண்டுக்கு அவற்றின் உற்பத்தி மதிப்பு 20 ஆயிரம் கோடி யுவான்.

சீனாவில் மூங்கில் தொழில் வளர்ச்சி

2018 உலக மூங்கில் மற்றும் பிரம்பு மாநாடு தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகத்தைச் சேர்ந்த பன்னாட்டு ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் வூ ட்சி மின் செவ்வாய்கிழமை இத்தகவலைத் தெரிவித்தார்.

மூங்கில் மற்றும் பிரம்பு முக்கியமான மற்றும் தனிச்சிறப்புமிக்க மூலவளங்களில் ஒன்றாகும். பசுமை பொருளாதாரம், காலநிலை மாற்றத்தைக் கையாளுதல், மனிதர்களின் வாழ்க்கைச் சூழல் மேம்பாடு, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு முதலிய துறைகளில் இது அதிகமாக பங்காற்றி வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்