2017ஆம் ஆண்டு சீனச் செய்தித்துறையின் வளர்ச்சி அறிக்கை

பூங்கோதை 2018-06-19 16:52:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு சீனச் செய்தித்துறையின் வளர்ச்சி அறிக்கை

2017ஆம் ஆண்டு சீனச் செய்தித்துறையின் வளர்ச்சி அறிக்கையை, அனைத்துச் சீனச் செய்தியாளர்களின் சங்கம் ஜூன் 19ஆம் நாள் வெளியிட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு, செய்தித்துறையின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருன்கின்றன. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இது குறித்து பலமுறை முக்கிய உரை நிகழ்த்தி, இத்துறையின் சீர்திருத்தம், புத்தாக்கம் மற்றும் சீரான வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளார். புதிய நிலைமையில், திறமைசாலிகளைப் பயன்படுத்தி, ஊக்குவித்து, பயிற்றுவிக்கும் பயன்தரும் நடவடிக்கைகளைப் பல்வேறு ஊடகங்கள் ஆக்கமுடன் ஆராய்ந்து வருகின்றன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்களின் ஒருங்கிணைப்பு என்பது, 2017ஆம் ஆண்டு சீனச் ஊடகத் துறை வளர்ச்சியின் முக்கிய அம்சமாகும். புதிதாக வளரும் ஊடகங்களின் சந்தை உயர்வேக நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இணையத் தகவல்கள் ஒழுங்குடன் பரவல் செய்யப்பட்டு வருகின்றன. ஆக்கப்பூர்வமான கருத்துக்களின் செல்வாக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்