அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குச் சீனாவின் பதில்

பூங்கோதை 2018-06-19 18:56:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குச் சீனாவின் பதில்

சீனப் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கையின் மீதான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் குற்றச்சாட்டு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் ஜூன் 19ஆம் நாள் பதிலளித்துப் பேசுகையில், பிற நாடுகளின் நலன்களைச் சீர்குலைக்கும் அதேவேளையில், சொந்த நாட்டுக்கும் நன்மை புரியாத செயல்களை அமெரிக்கா விவேகத்துடன் நிறுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, அண்மையில், இரு நாடுகளும் உருவாக்கியுள்ள ஒத்த கருத்தை அமெரிக்கா பொருட்படுத்தாமல், சீனாவின் மீது மீண்டும் வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளது. இச்செயல் சீன-அமெரிக்க மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நலன்களை மட்டுமல்லாமல், உலக மக்களின் நலன்களையும் பாதித்துள்ளது என்றும் கெங் ஷுவாங் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்