2017ஆம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை

இலக்கியா 2018-06-21 11:30:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசியக் கணக்குத் தணிக்கை பணியகத்தின் தலைவர் ஹு சே ஜுன் அம்மையார், 20ஆம் நாள் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டிக்கு, 2017ஆம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கையை வழங்கினார். கடந்த ஆண்டில் மத்திய நிதி மேலாண்மை, சிறப்பு முதலீடு, முக்கிய கொள்கைகளின் நடைமுறையாக்கம் முதலியவற்றை விட, முக்கிய இடர்ப்பாடுகளின் கட்டுப்பாடு, வறுமை ஒழிப்பு, மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய மூன்று பணிகளுக்கு, இவ்வறிக்கை முக்கியத்துவம் அளித்து, அவை தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிட்டுள்ளது.  

நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்களில் இடர்ப்பாட்டைக் கட்டுப்படுத்தும் பணி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக இடர்ப்பாடுடைய துறைகளின் மீதான கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. ஆனாலும் சில பிரச்சினைகள், இன்னும் முனைப்புடன் காணப்படுகின்றன. ஹு சே ஜுன் அம்மையார் கூறுகையில், 9 பெரிய அரசு சார் வங்கிகள், விதிகளை மீறி வீட்டு நிலச் சொத்துத் துறைக்கு 3608 கோடியே 70 லட்சம் யுவானை கடனாக வழங்கியுள்ளன. இணையதளத்தில் பிறரின் பெயரில் சட்டவிரோதமாகக் கடன் வாங்கும் பிரச்சினைகள் அதிகம். தகுதி இல்லாத சில நிறுவனங்கள், முக்கியமாக மாணவர்களுக்கு ரொக்கக் கடன் வழங்கி, மறைவான ஆபத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டில், சீனாவின் 21 மாநிலங்களிலுள்ள சுமார் 300 வறுமையான வட்டங்களில், அமைப்பியல் பிரச்சினை, போலித் தகவல்களை வழங்குதல் முதலியவை அவ்வப்போது நிகழ்ந்தன. நகர மற்றும் வட்டங்களின் அரசு அலுவலர்கள் பலர், வறுமை ஒழிப்புத் திட்டத்தில் பணி புரிந்த போது உறவினர்களுக்குச் சலுகை கொடுத்து, 3கோடியே 70 இலட்சம் யுவான் மதிப்பில் பணமோசடியை மேற்கொண்டனர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைமை முழுமையாக்கப்பட வில்லை. மாசுபாட்டைத் தடுப்பதில், பிரதேசங்கள் மற்றும் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பில் இன்னும் இன்னல்கள் காணப்படுகின்றன. அதே வேளை நிதியுதவி குறைவு பிரச்சினை இன்னும் தீர்க்கப்பட வேண்டும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலே அறிவித்த பிரச்சினைகள் குறித்து, ஹு சே ஜுன் அம்மையார் ஆலோசனை கூறுகையில், பயனுள்ள முறையில் உள்ளூர் அரசின் கடன் இடர்ப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். வறுமை ஒழிப்பு பணியில் பல்வேறு பிரிவுகளுக்கிடையே தகவல்களைச் சரிப்படுத்திக் கூட்டாக அனுபவிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைமையை முழுமையாக்கி, மாசுபாட்டுக்கான ஊற்றுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதனுடன், அதிகாரம் மற்றும் கடமை வரையறையை வகுப்பது, தவற்றைத் திருத்துவது, சட்டத்தின்படி அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது முதலியவை குறித்து தொடர்புடைய முறைமையை முழுமையாக்கும் ஆலோசனையும், இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்