சிறிய தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் சீனா

மதியழகன் 2018-06-21 16:47:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிறிய மற்றும் நுண்ணிய தொழில் நிறுவனங்களின் நிதித் திரட்டலுக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில், சீன அரசு மேலதிக ஊக்கமுள்ள நடவடிக்கைகளை எடுத்து, பொருளாதாரச் செயல்பாட்டில் காணப்படும் செலவினைக் குறைக்கும் பணியை முன்னெடுத்து வருவதாக, புதன்கிழமை நடைபெற்ற சீன அரசவையின் நிலைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைப்புத்தன்மையுடன் நடுநிலை நாணயக் கொள்கையைக் கடைப்பிடித்து, போதுமான மற்றும் உரிய பணப் புழக்கத்தை நிலைநிறுத்தி, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கினை வலுப்படுத்தி, சந்தை நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்