​சீன-அமெரிக்கக் கலந்தாய்வின் முன்னேற்றத்துக்கு அமெரிக்காவினால் பாதிப்பு

வான்மதி 2018-06-21 17:15:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்கக் கலந்தாய்வின் முன்னேற்றத்துக்கு அமெரிக்காவினால் பாதிப்பு

சீன-அமெரிக்க வர்த்தகக் கலந்தாய்வில் காணப்பட்ட முன்னேற்றம் பல்வேறு துறைகளின் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்போக்கைத் தொடர்ந்து முன்னேற்றாமல் வருத்தம் அளிக்கும் வகையில் அமெரிக்காவின் சொல்லும் செயலும் மாறிக் கொண்டே வருகின்றன. இம்மாற்றத்தினால் அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போருக்குச் சீனா வலிமையான பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபேங் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

இதனிடையில், வரி விதிக்கப்படும் பொருட்களின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டு, சர்வதேச வர்த்தக ஒழுங்குமுறையைச் சிதைத்து, சமனற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தினால், சீனா பல்வகை நடவடிக்கைகளின் மூலம், நாடு மற்றும் மக்களின் நலன்களைப் பேணிக்காக்கும் விதமாக வலிமையான பதிலடியை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்