சாங்ஷாவில் நடைபெறும் உயர் அதிகாரிகள் கூட்டம்

வான்மதி 2018-06-22 17:02:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையை செயல்படுத்தும் 15ஆவது உயர் அதிகாரிகள் கூட்டம் வரும் 27ஆம் நாள் சீனாவின் ஹுநான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் நடைபெற உள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை உறுதி செய்தார்.

இவ்வறிக்கையின் நடைமுறையாக்கம், கடல் சார் ஒத்துழைப்பு முன்னேற்றம், தென் சீனக் கடலில் நடத்தை விதிக்கான கலந்தாய்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சீனா ஆசியான் நாடுகளுடன் இணைந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்