21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் ஜின் ஜூயே விருது

பூங்கோதை 2018-06-25 10:31:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் ஜின் ஜூயே விருது

21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் ஜின் ஜூயே விருது வழங்கப்படும் விழா ஜூன் 24ஆம் நாளிரவு ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இதில், ஸ்விட்சர்லாந்து மற்றும் மங்கோலியா கூட்டாக தயாரித்த அவுட் ஆஃப் பேரடைஸ்(OUT OF PARADISE) என்னும் திரைப்படம், தலைசிறந்த திரைப்படம் என்ற விருதையும், சீனாவின் அலா சாங்கோ (Ala Changso) என்னும் திரைப்படம், நடுவர் விருது மற்றும் தலைசிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றன.

21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் ஜின் ஜூயே விருது

ஓர் ஆயர் தம்பதியர் ஒன்று, முதலாவதாக பிறந்த குழந்தையை வரவேற்பது குறித்து, கதையை, அவுட் ஆஃப் பேரடைஸ்(OUT OF PARADISE) என்னும் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது. தனிச்சிறப்புடைய புனித பயணம் பற்றி, அலா சாங்கோ (Ala Changso)என்னும் திரைப்படம் எடுத்துக்கூறியுள்ளது.

மேலும், கியூபா மற்றும் கனடா கூட்டாக தயாரித்த ஏ டிரான்சிலேட்டர்(A translator) என்னும் திரைப்படத்தின் இயக்குநர், தலைச்சிறந்த இயக்குநருக்கான விருதையும், பிரைடேஸ் சைல்டு(Friday's Child) என்னும் திரைப்படத்தின் மூலம், அமெரிக்க நடிகர் சாயி ஷெரிடன், தலைச்சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். அத்துடன், தாதோசாக்(Tadoussac) என்னும் திரைப்படத்தின் மூலம், கனடாவின் நடிகை மார்ட்டின் லாரோகே தலைசிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.

21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் ஜின் ஜூயே விருது

இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரைப்படங்களில், 47 திரைப்படங்கள் முதல்முறையாகத் திரையிடப்பட்டுள்ளன. 24 திரைப்படங்கள் வெளிநாடுகளில் முதல்முறையாகக் திரையிடப்பட்டுள்ளன. மேலும், 84 திரைப்படங்கள் ஆசியாவில் முதல்முறையாகவும், 118 திரைப்படங்கள் சீனாவில் முதல்முறையாகவும் திரையிடப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்