சீன மற்றும் பிரான்ஸ் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சிவகாமி 2018-06-26 09:46:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் பிரான்ஸ் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சீன மற்றும் பிரான்ஸ் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் தலைமையமைச்சர் பிலிப்உடன் 25ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். எரியாற்றல், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண் உணவுப் பொருட்கள், மருத்துவச் சுகாதாரம் முதலிய துறைகளைச் சேர்ந்த இரு தரப்புகளின் ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களின் முன்பாக கையொப்பமிடப்பட்டன. பேச்சுவார்த்தையின் போது, சீனாவுடன் இணைந்து, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேலும் அதிகரித்து, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி, தற்போதைய உலக நிலைமையில் காணப்படும் நிதானமற்ற தன்மையைக் கூட்டாக சமாளிக்க பிரான்ஸ் விரும்புகின்றது. பலதரப்புவாதத்தையும் சுதந்திர வர்த்தக அமைப்பு முறையையும் பேணிக்காத்து, வர்த்தகப் பாதுகாப்பையும் ஒருதரப்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்று பிலிப் தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த லீ கெச்சியாங், தற்போது, வர்த்தகப் பாதுகாப்பு மற்றும் ஒருதரப்புவாதம் தலைதூக்கி வருகின்றன. இந்த நிலைமையில், வர்த்தக மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் பல்வேறு நாடுகள் கூட்டாக ஆதரித்து, பலதரப்புவாதத்தையும் திறப்பு ரக உலகப் பொருளாதாரத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்