சின்ஜியாங்கின் மனித உரிமைப் பணியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

மதியழகன் 2018-06-26 11:16:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் 38ஆவது கூட்டத் தொடரின் போது, சின்ஜியாங் மனித உரிமைப் பணியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற தலைப்பிலான மாநாடு 25ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள பன்னாட்டு மாளிகையில் நடைபெற்றது. வறுமை  ஒழிப்பு, கல்வி, பண்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு, மருத்துவம் ஆகிய துறைகளில் சீனாவின் சிங்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பெறப்பட்டுள்ள சாதனைகளும் இம்மாநாட்டில் விரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சின்ஜியாங் சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் காவ் ஜியான்லோங் இம்மாநாட்டில் பேசுகையில்

தொடர்ச்சியான முயற்சியுடன், சின்ஜியாங்கிலுள்ள வறிய மக்களின் வாழ்வு மற்றும் வளர்ச்சி உரிமைகள் வலுவான முறையில் காக்கப்பட்டுள்ளன. 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங்கில் 13.9 இலட்சம் மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

சின்ஜியாங் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது மேலாண்மைக் கல்லூரித் துணைத் தலைவர் சூலியாடி ஸிமாயீ உரைநிகழ்த்தியபோது:

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்படுவதற்கு முன்பு வரை, சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை.  தற்போது, நகரப்பகுதிகளிலும் அரசு மற்றும் சமூக பங்களிப்புடன் கூடிய நிறுவனங்களில் வேலை செய்துள்ள பெண்களின் விகிதம், 40.4 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஜியாங்கின் பெண்கள், சமூக வளர்ச்சிக்கு முக்கிய ஆற்றலாக மாறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

சின்ஜியாங் சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இனப் பண்பாட்டு ஆய்வகத்தின் தலைவர் ஜலி, வுபூர் கூறியதாவது:

சின்ஜியாங்கிலுள்ள பல்வேறு இனங்களின் பண்பாட்டு வளங்கள், சீனத் தேசிய பண்பாடுகளில் இருந்து விரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தற்போது,  சட்டப்படி பல்வேறு தேசிய இனங்கள் தங்களின் சொந்தமான மொழியையும் எழுத்துக்களையும் பயன்படுத்தும் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, பண்பாட்டு மரபுச் செல்வங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவையும் பயனுள்ள முறையில் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்