சீன மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சிவகாமி 2018-06-28 09:41:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசவை உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங் ஹே 27ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் மேட்டிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவும் அமெரிக்காவும் பகைமையின்மையிலும் மோதலின்மையிலும் ஊன்றி நின்று, பரஸ்பரம் மதிப்பு அளித்து, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெற்றால் தான். கூட்டு வளர்ச்சியை நனவாக்க முடியும் என்று வெய் ஃபெங் ஹே கூறினார். தைவான் பிரச்சினை, தென் சீனக் கடல் பிரச்சினை, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பிரச்சினை முதலியவை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டையும் கவனத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் உலகத்துக்கும் நன்மை பயக்கின்றது. அமெரிக்காவும் சீனாவும் இணக்கமாக பழக வேண்டும். ஒத்துழைப்பு மூலம் இரு மாபெரும் நாடுகள் உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் என மேட்டிஸ் நம்பிக்கை தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்