சீன எல்லை பாதுகாப்புப் படையின் பிரதிநிதிக் குழு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயணம்

பூங்கோதை 2018-06-29 10:10:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன எல்லை பாதுகாப்புப் படையின் பிரதிநிதிக் குழு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயணம்

சீன எல்லை பாதுகாப்பு படையின் பிரதிநிதிக் குழு, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அப்போது, இரு நாட்டுப் படைகளின் தொடர்புடைய தலைவர்களுடன் இப்பிரதிநிதிக் குழு பேச்சுவார்த்தை நடத்தும். போர் மண்டல நிலையிலான தொடர்பு, எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் என்று சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ச்சியான் ஜூன் 28ஆம் நாள் தெரிவித்தார்.

சீன-இந்தியப் படையின் உறவு குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுடன் இணைந்து, இருதரப்பு உறவை வளர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கியுள்ள பொதுக் கருத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும், நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, கருத்து வேற்றுமைகளைப் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தி, எல்லையின் நிலைப்புத் தன்மையைப் பேணிகாக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்