திறப்பை தொடர்ச்சியாக விரிவாக்க சீனா உறுதி

மதியழகன் 2018-06-29 15:30:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

திறப்பை தொடர்ச்சியாக விரிவாக்க சீனா உறுதி

சீனா மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்ற வெள்ளையறிக்கையை சீனா வியாழக்கிழமை வெளியிட்டது.

2001ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது முதல்,  சீனா பலதரப்பு வர்த்தக விதிகளுடனான இணைப்பை வலுப்படுத்தி வருகிறது. சரக்கு மற்றும் சேவைத் துறையில் வெளிநாட்டுத் திறப்புக்கான வாக்குறுதியை சீனா பயனுள்ள முறையில் நிறைவேற்றியுள்ளது. 2010ஆம் ஆண்டு தான், சுங்க வரிக் குறைப்பு தொடர்பான அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. சுங்க வரி விகிதம், 2001ஆம் ஆண்டில் இருந்த 15.3 விழுக்காட்டில் இருந்து 9.8விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை துறையில் 100 பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் அன்னிய முதலீட்டின் மீதான தடைகள் 65 விழுக்காடு நீக்கப்பட்டுள்ளன. தடை விதிக்கப்படும் வகைகளின் எண்ணிக்கை, 28 மட்டும் உண்டு என்று வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பை தொடர்ச்சியாக விரிவாக்க சீனா உறுதி

காலஓட்டம் மற்றும் உலக வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு, சீனா உறுதியுடன் திறப்பை விரிவாக்கி வருகிறது. விரிவான, ஆழமான மற்றும் பல்வகைத் தன்மையிலான திறப்பு ஒழுங்குமுறையை உருவாக்குவதன் மூலம், மேலதிக பரஸ்பர நன்மை மற்றும் கூட்டு வெற்றி என்ற நிலையை அடையும் என்றும் வெள்ளையறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்