சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐ.நா பேரவைத் தலைவர் சந்திப்பு

தேன்மொழி 2018-07-03 16:55:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 72-ஆவது ஐ.நா.பேரவைத் தலைவர் லேகாக் ஆகியோர் ஜுலை 3-ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதியைப் பேணிக்காப்பது, வளர்ச்சியைத் தூண்டுவது ஆகிய துறைகளில் ஐ.நா ஆற்றி வரும் முக்கியப் பங்கிற்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கும் என்று வாங் யீ தெரிவித்தார். மேலும், பல தரப்புவாதப் போக்கை உறுதியாக ஆதரிக்கும் அதேவேளையில், ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்பு முறையைச் சீனா கண்டிப்பாக பேணிக்காக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிர, ஐ.நாவின் சீர்திருத்தம், 2030ஆம் ஆண்டுக்கான தொடரவல்ல வளர்ர்சி நிரல் மற்றும் பிரதேசத்தின் சூடான பிரச்சினைகள் முதலியவை குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்