தாய்லாந்து சுற்றுலாப் படகுகள் விபத்தில் சீனப் பயணிகள் பலி

வாணி 2018-07-06 20:23:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தாய்லாந்து சுற்றுலாப் படகுகள் விபத்தில் சீனப் பயணிகள் பலி

தாய்லாந்து சுற்றுலாப் படகுகள் விபத்தில் சீனப் பயணிகள் பலி

தாய்லாந்தின் புக்கிட் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 5ஆம் நாள் 18:45 மணியளவில் சீனப் பயணிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகள் கடும் புயலினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மொத்தம் 127 சீனப்பயணிகளில் இதுவரை 78 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்தனர். 33 பேர் இன்னும் காணவில்லை. காயமுற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கும் மிகுந்த கவனம் செலுத்தி தாய்லாந்தின் தொடர்புடைய வாரியங்கள் முழு மூச்சுடன் மீட்புப் பணியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தவிரவும், அந்நாட்டிலுள்ள சீனத் தூதரகமும், சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகமும் தொடர்புடைய பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்