ஊக்குவிப்பின் மூலம் சீர்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

வான்மதி 2018-07-07 14:42:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜுலை 6ஆம் நாள் பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான மத்திய கமிட்டியின் 3ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, மத்திய கமிட்டி அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒட்டுமொத்த சீர்திருத்தத்தை முன்னேற்றி வருகிறது. பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் பணியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஆழமாக்கும் வகையில், முக்கிய இன்னல்களையும் பிரச்சினைகளையும் முயற்சியுடன் சமாளிக்கவும், அமைப்பு முறையின் உயிராற்றலைத் தட்டியெழுப்பி, அடிமட்ட அனுபவங்களைப் பயன்படுத்தி, ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

தவிரவும், பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது மற்றும் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதில் ஹேபெய் மாநிலத்தின் சியோங் ஆன் புதிய பகுதிக்கு ஆதரவளிப்பது பற்றிய வழிகாட்டல் உள்ளிட்ட ஆவணங்கள் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்