அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் மீது உலகளவில் குற்றச்சாட்டு

வான்மதி 2018-07-07 17:29:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் மீது உலகளவில் குற்றச்சாட்டு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3400 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது அமெரிக்கா ஜுலை 6ஆம் நாள் கூடுதலாக 25 விழுக்காடு வரி வசூலிக்கத் தொடங்கி, மனிதகுலத்தின் பொருளாதார வரலாற்றில் முன்கண்டிராத வர்த்தகப் போரைத் தொடுத்தது. இது உலகளவில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அரசு பின்னடைவான வர்த்தகக் கொள்கையை, பல நாடுகளின் நிபுணர்கள், அறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் கண்டிப்பதோடு, அதன் பின்விளைவு குறித்தும் கவலை தெரிவித்தனர். மேலும், அமெரிக்கா முதலிடம் என்ற கொள்கை வெற்றி பெறாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை உலகளவில் கடும் கோபத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்கா முதலிடம் என்ற கொள்கையைச் செயல்படுத்தினால், இறுதியில் அமெரிக்கா உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்