2018 ஆசிய வணிகக் கருத்தரங்கு துவக்கம்
2018 ஆசிய வணிகக் கருத்தரங்கு 9ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்றது. “பொருளாதாரப் புத்தாக்கம், மேம்பாட்டு வளர்ச்சி”என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில், தற்போதைய சர்வதேச நிலைமை, ஆசிய புத்தாக்கப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து, நிபுணர்கள் விவாதம் நடத்தினர்.
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் புத்தாக்க மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பணியகத்தின் தலைவர் யாங் வெய் சியூங், இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கூறுகையில், சர்வதேசமயமாக்கம், நிதி, சட்டம், நிர்வாகம் முதலிய துறைகளில் உயர் நிலையில் இருக்கும் ஹாங்காங், சர்வதேச அனுபவங்களையும் நன்மதிப்பையும் கொண்டுள்ளது. இவற்றின் மூலம், ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், புத்தாக்கப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்குத் துணை புரிவதற்கு, ஹாங்காங் மேலும் சிறப்பான நிலைமையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.