வர்த்தகப் போர்:ஆதிக்கத்துக்கும் விதிமுறைக்கும் இடையே போர்

வான்மதி 2018-07-11 18:44:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகப் போர்:ஆதிக்கத்துக்கும் விதிமுறைக்கும் இடையே போர்

10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படும் 20000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் 10ஆம் நாள் வெளியிட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்காவின் இந்நடவடிக்கை வர்த்தக ரீதியில் கொடுமையான செயலாகும் என்று தெரிவித்தார்.

இதற்கு சீனா உரிய பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு, தனது சட்டப்பூர்வ உரிமை நலன்களை உறுதியாகப் பேணிக்காக்கும். ஒருதரப்பு வாதம் மற்றும் பலதரப்பு வாதம், பாதுகாப்பு வாதம் மற்றும் தடையில்லா வர்த்தகம், ஆதிக்கம் மற்றும் விதிமுறை ஆகியற்றுக்கு இடையேயான போராகவும் இது கருதப்படுகிறது. சீனா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையையும் விதிமுறையையும் பேணிக்காக்கும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்