ஷிச்சின்பிங் மேற்கொள்ளும் பயணம் பற்றிய செய்தியாளர் கூட்டம்

வான்மதி 2018-07-13 16:10:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங் மேற்கொள்ளும் பயணம் பற்றிய செய்தியாளர் கூட்டம்

ஐக்கிய அரபு அமீரகம், செனெகல், ருவாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பங் மேற்கொள்ள உள்ள அரசு முறை பயணம், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 10ஆவது பேச்சுவார்த்தையில் அவரது பங்கெடுப்பு, மொரீஷியஸில் அவர் மேற்கொள்ளும் நட்புப் பயணம் ஆகியவை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.

கடந்த மார்ச் திங்கள் சீன அரசுத் தலைவராக ஷிச்சின்பிங் தொடர்ந்து பதவியேற்ற பிறகு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. சர்வதேச நிலைமை மாறி வரும் பின்னணியில் வளரும் நாடுகளின் மீது சீனா மேற்கொள்ளும் முக்கிய தூதாண்மை நடவடிக்கை இதுவாகும். சீன-ஐக்கிய அரபு அமீரக உறவை உயர்த்துவது, வளைகுடா பிரதேசத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்றுவது, மத்திய கிழக்கு பிரதேசத்தின் அமைதியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கமான சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தை உருவாக்குவதற்கும், மேற்கூறிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் இது துணைபுரியும் என்று துணை வெளியுறவு அமைச்சர் கொங் சுன்யொவ் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 2ஆவது பொற்காலத்தின் துவக்க ஆண்டாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் சர்வதேச நிலைமை, பிரிக்ஸ் ஒத்துழைப்பு, பொது அக்கறை உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். 5 நாட்டுத் தலைவர்களின் அரசியல் வழிகாட்டலில், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது, புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவது, மனிதருக்கான பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பது ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் மேலும் பெரும் பங்காற்றும் என்று வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் சாங் ஜுன் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்