சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் சந்திப்பு

சிவகாமி 2018-07-17 11:01:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், ஐரோப்பிய பேரவையின் தலைவர் துஸ்க், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜுன்கர் ஆகியோர் 16ஆம் நாள் காலை மக்கள் மாமண்டபத்தில் 20ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் சந்திப்புக்குக் கூட்டாக தலைமை தாங்கினர்.

அந்நிய வணிகர் முதலீட்டு அனுமதிக்கான புதிய எதிர்மறை பட்டியலைச் சீன அரசு அண்மையில் வெளியிட்டது. இது, சந்தை நுழைவுக்கான கட்டுப்பாட்டை மேலும் தளர்த்தும் என்று லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் கூட்டாக பொறுப்பேற்று, பாதுகாப்புவாதத்தையும் ஒரு தரப்பு வாதத்தையும் எதிர்த்து, சர்வதேச விதிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று துஸ்க், ஜுன்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு, முதலீடு, சுற்றுசூழல் பாதுகாப்பு, சுழற்சி முறை பொருளாதாரம், கடல் சார் கூட்டு உறவு, சுங்கசாவடி முதலிய துறைகளில் சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான பல ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களின் முன் கையெழுத்தாகின.

பின்னர், அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்