சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் முன்னேற்றம் பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு!

மதியழகன் 2018-07-18 11:29:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் முன்னேற்றம் பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு!

சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் முன்னேற்றம் பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் செய்தி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது.

சிங்காய்-திபெத் பீடபூமிக்கு, "உலகின் கூரை" , " பூமியின் 3ஆவது துருவம்",  "ஆசியாவின் நீர் கோபுரம்" ஆகிய பெருமைகளைப் பெற்றுள்ளது. இது, அரிய வன விலங்குகளின் இயற்கை வாழ்விடமாவும், பீடபூமி உயிரனங்களின் மரபணு வங்கியாகவும் கருதப்படுகிறது. சீனாவில் சுற்றுச்சூழல் பணிகள் முக்கியமாக நடைமுறைப்படுத்தப்படும் பகுதியாகவும், சிங்காய்-திபெத் பீடபூமி விளங்குகிறது என்று இந்த வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் முன்னேற்றம் பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு!

சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் கட்டுமானம், அங்குள்ள தொடரவல்ல வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும், சீனா மற்றும் உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதன்மை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது, சிங்காய்-திபெத் பீடபூமி சுற்றுச்சூழலுக்கான முறைமை படிப்படியாக முழுமையாகி வருகிறது. சுற்றுச்சூழல் கட்டுமானத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் தரம் சீராகி வருகிறது. அறிவியல் தொழில் நுட்பம் ரீதியிலான ஆதரவு கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் கட்டுமானத்தின் செயல்முறை விளக்கம் என்ற பங்களிப்பு தோன்றியுள்ளது என்று வெள்ளையறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் கட்டுமானத்தில் பல அறைகூவல்கள் இன்னும் எதிர்கொள்ளப்படும். உலக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், பனிப்பாறை உடைப்பு, இயற்கைச் சீற்றம் ஆகிய அச்சுறுத்தல்கள் இன்னும் நிலவுகின்றன. சுற்றுச்சூழல் கட்டுமானத்தின் சாதனைகளை நிலைநிறுத்தி மேம்படுத்துவது கடினமாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யுகத்தில், சிங்காய்-திபெத் பீடபூமியின் சூற்றுச்சூழல் பணி, அழகிய சீனா என்ற திட்டத்தில் முக்கிய பகுதியாகும். மேலும் அழகான சிங்காய்-திபெத் பீடபூமியை சீன மக்கள் நம்பிக்கையுடன் கட்டி அமைத்து, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான சுமுகமான சகவாழ்வை அடைய முயற்சி செய்வார்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்