சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவதன் இரகசியம் என்ன?

வான்மதி 2018-07-20 14:46:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவதன் இரகசியம் என்ன?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களின் மீது 10 விழுக்காடு கூடுதல் வரி வசூலிக்கும் பட்டியலை விவாதிக்கும் வகையில், அமெரிக்காவின் 301ஆவது பிரிவு விசாரணைக்கான கமிட்டி வரும் ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் நாள் வரை கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த உள்ளது. சீனாவின் தவறான செயல் மற்றும் சமனற்ற வர்த்தக நடவடிக்கையின் காரணமாக அமெரிக்கா இப்படி செயல்படுகிறது என்று டிரம்ப் அரசு தெரிவித்தது.

அமெரிக்காவின் புகார் மட்டுமே கேட்டறிந்தால், சீனாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தன என்ற கருத்து எளிதில் உருவாக்கப்படும். ஆனால் இது உண்மையா?

உண்மையில் முதலாவதாக, சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெரிய நுகர்வு சந்தையிலிருந்து அமெரிக்காவின் பல நிறுவனங்கள் பயனடைந்து, சீனாவில் வெற்றிகரமாக அலுவல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் அம்ஃபினொல் நிறுவனம் 1984ஆம் ஆண்டு சீனச் சந்தையில் நுழைந்தது. அதன் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, 2008 முதல் 2017 வரையிலான 10 ஆண்டுகளில், உலகளவில் இந்நிறுவனத்தின் வருமான அதிகரிப்பு ஆண்டுக்கு சராசரியாக 9 விழுக்காட்டை எட்டியது. இதனிடையே சீனச் சந்தையில் அதன் வருமானம் 56 கோடி டாலரிலிருந்து 210 கோடி டாலராக அதிகரித்து, ஆண்டுக்கு சராசரி அதிக்கரிப்பு 16 விழுக்காட்டை எட்டியது. மேலும் 2015ஆம் ஆண்டு சீனாவின் தகவல்தொடர்பு மற்றும் இணைப்பு வசதி சந்தையில் 80 விழுக்காடு பங்கினை இந்நிறுவனம் பிடித்துள்ளது. சீன நிறுவனங்களையும் சீனாவிலுள்ள இதர நாடுகளின் தொழில்சாலைகளையும் கையகப்படுத்துவதன் மூலம் விரைவான வளர்ச்சி அடைந்து வரும் அம்ஃபினொல் நிறுவனம் சீனச் சந்தையிலிருந்து அதிக லாபம் பெற்று வருகிறது.

இரண்டாவதாக, சீனாவின் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கு பல்வகை சலுகை கொள்கைகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்த பிறகு பெருவாரியான அமெரிக்க நிறுவனங்கள் சீனச் சந்தையில் நுழைந்துள்ளன. அந்நிய முதலீட்டுக்கு சீன அரசு வழங்கிய முன்னுரிமையை பயன்படுத்தி, அவை பெரும் லாபத்தைப் பெற்றுள்ளன. அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா இன்றியமையாத நுகர்வுச் சந்தை.

ஆனால் தன் நாட்டின் நலன் என்று கூறி, அமெரிக்கா சீனா மீது வர்த்தகப் போர் தொடுத்தது. இத்தகைய ஒருசார்பு செயல் சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமா? கூட்டு வெற்றிக்கு மாறாக இழப்புதான் இத்தகைய வர்த்தகப் போர் கொண்டு வரும் என்பது பொது கருத்தாக உள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்