ஷாங்காய் மாநகரில் 150000 வணிகர்கள் பங்கெடுக்கும் பொருட்காட்சி

வான்மதி 2018-07-28 15:20:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் மாநகரில் 150000 வணிகர்கள் பங்கெடுக்கும் பொருட்காட்சி

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இவ்வாண்டு நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற உள்ளது.

ஷாங்காய் மாநகரில் 150000 வணிகர்கள் பங்கெடுக்கும் பொருட்காட்சி

இது பற்றி 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனத் துணை வணிக அமைச்சர் வாங் பிங்நான் கூறுகையில், தற்போது வரை 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2800க்கும் அதிகமான நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன. அதன்படி, இதில் பங்கேற்கும் வணிகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிவித்தார்.

ஷாங்காய் மாநகரில் 150000 வணிகர்கள் பங்கெடுக்கும் பொருட்காட்சி

தவிரவும், இப்பொருட்காட்சிக்கான பல்வகை ஆயத்தப் பணிகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வருகின்றன என்று ஷாங்காய் மாநகராட்சியின் துணைத் தலைவர் வூ சிங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்