சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 91வது ஆண்டு நிறைவு

சரஸ்வதி 2018-08-01 09:42:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜூலை திங்கள் 31ஆம் நாள், சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 91வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மக்கள் மாமண்டபத்தில் விருந்து ஒன்றை நடத்தியது. சீன மத்தியக் இராணுவக் கமிட்டியின் உறுப்பினரும், அரசவை உறுப்பினரும், சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபங் ஹெ இதில் உரைநிகழ்த்தினார்.

அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு நலன் ஆகியவற்றை சீனா பின்பற்றி வருகிறது. தற்காப்பு என்ற தேசியப் பாதுகாப்புக் கொள்கையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்க சீனா பல்வேறு நாடுகளுடன் பாடுபடும். பல்வேறு இராணுவப் படைகளுடன் சேர்ந்து, இராணுவப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்கி, உலகின் அமைதியான வளர்ச்சியைப் பேணிக்காப்பதில் மேலும் முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்