சுங்க வரி விதிப்பதில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதில்

மதியழகன் 2018-08-01 17:23:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுங்க வரி விதிப்பதில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதில்

2,0000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 25 விழுக்காட்டு சுங்க வரி விதிப்பதாக அமெரிக்கா திட்டப்படி ஆகஸ்டு முதல் நாள் இரவில் அறிவிக்க உள்ளது. இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் சுவாங் இன்று கூறியதாவது:

அழுத்தம் கொடுத்தல், மோசடி செய்தல் போன்ற அமெரிக்காவின் செயல்பாடுகள், பயன் பெறப் போவதில்லை. அமெரிக்கா மேலும் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டால், எமது சட்டப்படியான உரிமைகளைப் பேணிக்காக்கும் விதமாக சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும்.  பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சையைத் தீர்ப்பது சீனாவின் நிலைப்பாடு. சமத்துவம், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், விதிமுறையைப் பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒருசார்பிலான அச்சுறுத்தலும் அழுத்தமும், எதிர் விளைவு தரும் என்று தெவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்