சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய உந்து சக்தி: நுகர்வு

மதியழகன் 2018-08-02 16:13:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய உந்து சக்தி: நுகர்வு

சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, இவ்வாண்டின் முற்பாதியில், 18 இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகம். மேலும் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு விகிதம் 78.5 விழுக்காடாகி விட்டது. சீனப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் முதலாவது உந்து ஆற்றலாக நுகர்வுத் துறை மாறியுள்ளது.

நுகர்வு அதிகரிப்புப் பணி தொடர்பாக, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்தப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சீன மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் விதமாக, அடுத்த கட்டத்தில் உயர் தரமான உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவையை விநியோகிக்க முயற்சி மேற்கொள்வோம் என்று இந்த ஆணையத்தின் அதிகாரி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்