அமெரிக்கா மீது சீனா மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கை பற்றி சீன வணிக அமைச்சகத்தின் கருத்து

வான்மதி 2018-08-03 20:51:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா மீது சீனா மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கை பற்றி சீன வணிக அமைச்சகத்தின் கருத்து

20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களின் மீது கூடுதலாக 10 விழுக்காட்டு வரி வசூலிக்கும் அடிப்படையில், இந்த வரி விகிதத்தை 25 விழுக்காடாக உயர்த்துவதென அமெரிக்கா அண்மையில் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்ட் 3ஆம் நாள் பேசுகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 6000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 4 நிலைகளிலான விகிதத்தின்படி வரி வசூலிப்பதென சீனா முடிவெட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சீனா மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கை பகுத்தறிவுடனும் கட்டுப்பாட்டுடனும் உள்ளது. பரந்தளவில் கருத்துக்களைக் கேட்டறிந்து மதிப்பீடு செய்த பிறகு, குறிப்பாக பொது மக்களின் நலன்கள், தொழில் நிறுவனங்களின் தாங்குதிறன், உலக தொழில் சங்கிலி உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு இந்நடவடிக்கை முன்வைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

ஒருசார்பு அச்சுறுத்தலுக்குப் பதிலாக, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் சமத்துவம் வாய்ந்த அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவது தான், வர்த்தகச் சர்ச்சையைத் தீர்க்கும் பயனுள்ள வழிமுறை என்று சீனா எப்போதுமே கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்