சீனப் பொருளாதார வளர்ச்சி

மதியழகன் 2018-08-08 17:28:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது வரை, சீனாவின் பல பகுதிகளில் கடந்த அரையாண்டு காலப் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடையப் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு பகுதிகளில் பொருளாதாரம் சீராக வளர்ந்துள்ளது. 29 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் 16 இடங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு, ஒரு இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. இவற்றில், குவாங்டோங் மற்றும் ஜியாங்சூ மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 4 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 17 மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 6.8 விழுக்காட்டை தாண்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதத்த்தைப் பார்க்கும் பொழுது, மேற்கில் வளர்ச்சி அதிகம் கிழக்கில் குறைவு என்ற பழைய நிலை மாறியுள்ளது என்பது பலப்படும். எடுத்துக்காட்டாக, அரையாண்டில் சோங்கின் பொருளாதாரம் 6.5 விழுக்காடு வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட, 4 விழுக்காடு குறைவு. அதேசமயத்தில், கிழக்கிலுள்ள ட்செஜியாங் மாநிலத்தின் அதிகரிப்பு விகிதம், 7.6 விழுக்காடு என்னும் நிலையை எட்டியுள்ளது. இந்த விகிதம், நாட்டின் சாரசரி நிலையை விட 0.8 விழுக்காடு அதிகம். தொழில் துறைகள் மேம்பட்டு வரும் பின்னணியில், இணையம், மேகக் கணிமை, பெருந்தரவு போன்ற புதிய தொழில் நுட்பங்களால், புதிய தொழில் மற்றும் புதிய வணிக மாதிரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவை, ட்செஜியாங் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ந்து வருவதற்கான புதிய உந்து ஆற்றலாக விளங்குகின்றன.

பொருளாதார வளர்ச்சி வேகத்தில், ஏற்றத் தாழ்வு நிலவுகின்றது. ஆனால், தரமான வளர்ச்சி வழிமுறையில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு ஆகியவற்றைச் சார்ந்திருப்பது தெளிவாகி வருகிறது.

எதிர்காலத்தில், சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்துவதோடு, தரமிக்க வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும். இது பற்றி சீனச் சர்வதேச பொருளாதாரப் பரிமாற்ற மையத்தின் கல்வியியல் குழுவின் உறுப்பினர் வாங் ஜுன் கூறியதாவது:

முதலில், தற்போதைய பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில், ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையைச் சரிப்படுத்த வேண்டும். இரண்டாதாக, நுகர்வு உயர்வு மற்றும் அரசு சாரா முதலீடு, கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றை முக்கியமாக கொண்டு, உள்நாட்டுத் தேவையை அதிகரித்து, வெளிப்புறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான தாக்கத்தைத் தணிக்க வேண்டும். மூன்றாவதாக, சந்தையின் விநியோக முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும். நான்காவதாக, அரசு சார் தொழில் நிறுவனங்கள், நிதி, நாணயம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படையான துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஐந்தாவதாக, திறப்புக் கொள்கையில், வெளிநாட்டு முதலீட்டிற்கான சந்தை நுழைவு மற்றும் தடைகளைத் தளர்த்த வேண்டும். ஆறாவதாக, புதுமையாக்கம் செய்வதன் மூலம் வளர்ச்சியைத் தூண்டுவதற்கான எளிமையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்