மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

தேன்மொழி 2018-08-13 18:25:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2013-ஆம் ஆண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்ட பின், பல சீனத் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு சந்தையை ஆக்கப்பூர்வமாக வளர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகள் முயற்சி மூலம், மத்திய கிழக்குப் பிரதேசத்தின் மின்னணு வணிக அலுவலில் சீனத் தொழில் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில், ஜாலிசிக்(Jollychic)என்ற பெயரை, ஒவ்வொரு குடும்பமும் அறிந்துகொண்ட வணிக இணையமாகும். சீனாவின் ட்செ ச்சியாங் மாநிலத்தின் ட்சி யூ தகவல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கிய, நாடு கடந்த இவ்வணிக இணையம், 2013 ஆண்டில், செளதி அரேபியாவில் இயங்க துவங்கியது. தற்போது, ஜாலிசிக், மத்திய கிழக்குப் பிரதேசத்தில், ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நடமாடும் மின்னணு வணிக தொழில் சின்னமாக மாறியுள்ளது. செளதி அரேபியா, ஜோர்டன், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில், அதன் அலுவல் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. செளதி அரேபியாவிலும் துபாயிலும், இத்தொழில் நிறுவனம் பண்டசாலைகளை நிறுவியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

2017ஆம் ஆண்டின் இறுதி வரை, மத்திய கிழக்குப் பிரதேசத்தில், ஜாலிசிக் வணிக இணையத்தில் பதிவு செய்துள்ள நுகர்வோரின் எண்ணிக்கை 3கோடியே 50இலட்சத்தைத் தாண்டியுள்ளது. செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், அமெரிக்கா, சீனா முதலிய பிரதேசங்களில், இத்தொழில் நிறுவனத்தின் கிளைகள் இருக்கின்றன. முழு உலகிலும் இத்தொழில் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை, 3500க்கும் மேலாகும்.

இதனிடையில், குலோபல்க்ரோ இ-வணிகம்(Globalegrow E-Commerce), அலிபாபா குழுவின் கீழுள்ள அலி எக்ஸ்பிரஸ் முதலிய சீன மின்னணு வணிக அலுவல் நிறுவனங்கள், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் நன்கு வளர்ச்சியை அடைந்து வருகின்றன. செளதி அரேப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் முதலிய நாடுகளின் வியாபாரத்துடன் தொடர்புடைய செயலி பதிவிறக்கம் செய்யும் வரிசையின் முதல் 10 இடங்களில், 6 செயலிகள் சீனாவைச் சேர்ந்தவை. சீன இணையத்தின் நீண்டகால வளர்ச்சி மூலம் கிடைத்த சேமிப்பு, சீனத் தயாரிப்புஇன் மேம்பாடு ஆகியவை, சீன மின்னணு வணிக அலுவல் நிறுவனங்கள், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் முன்னேற்றத்தைப் பெற்றதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும் என்று ட்சி யூ தொழில் நிறுவனத்தின் துணை இயக்குநர் ட்சோ யென் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் சீன மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி

கடநத் ஆண்டில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, தொடர்புடைய நாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் வாய்ப்புகளைக் கொண்டு வந்தது. இவ்வாண்டின் ஜுலை திங்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்,  ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, மின்னணு வணிக அலுவல் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இது, மின்னணு வணிக அலுவலுக்கு சீரான வளர்ச்சி சூழலை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்