சீன இராணும் மற்றும் பாதுகாப்பு பற்றிய அமெரிக்க அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு

வான்மதி 2018-08-18 18:43:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டுக்கான சீன இராணுவம் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி பற்றிய அறிக்கையை அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 17ஆம் நாள் வெளியிட்டது. இதில், சீனாவின் தொலைநோக்கு, சீன இராணுவம், தைவான் நீரிணையின் நிலைமை மற்றும் இருகரை உறவு உள்ளிட்டவை குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ சியன் 17ஆம் நாளிரவு இது பற்றி உரை நிகழ்த்துகையில் உறுதியான எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைதியான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு, தற்காப்பு தன்மையுடைய பாதுகாப்பு கொள்கையைச் சீனா உறுதியாகப் பின்பற்றி வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியையும் உலகின் அமைதி, நிலைப்பு மற்றும் செழுமையையும் பேணிகாப்பதற்காக சீன இராணும் நவீன கட்டுமானத்தை வலுப்படுத்தி வருகிறது. சீன இராணுவத்தின் சீர்திருத்தம், ஆயுத சாதன வளர்ச்சி, இணைய பாதுகாப்புத் திறன் கட்டுமானம் ஆகியவையும் சரியாகவும் நியாயமாகவும் உள்ளன. அமெரிக்க அறிக்கையில் சீனா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றவையாகும் என்று வூ சியன் சுட்டிக்காட்டினார்.

மேலும், தைவான் சீனாவின் ஒரு பகுதி. இது தெளிவான உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், கடல் சார் பிரச்சினையில் சீனாவின் மாறாத தெளிவான நிலைப்பாட்டை வூ சியன் மீண்டும் தெளிவுபடுத்தினார். தொடர்புடைய நாடுகளுடன் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியான முறையில் சர்ச்சையைத் தீர்க்க சீனா பாடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

சீன இராணுவம் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி பற்றிய அறிக்கையை அமெரிக்கா ஆண்டுதோறும் வெளியிடும் செயலைக் குறித்து அவர் பேசுகையில், இருநாடுகளின் பரஸ்பர நம்பிக்கையை இது பாதித்து, இருதரப்புகளின் பொது நலன்களுக்கும் பொருத்தமற்றது என்றும், அமெரிக்கா தற்சார்பற்ற நிலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவப் படைக் கட்டுமானத்தைக் கவனத்தில் கொண்டு, இத்தகைய வெளியீட்டை நிறுத்திக் கொள்வதோடு, இருநாட்டு இராணுவ உறவின் நிலையான வளர்ச்சியை பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்