சீன-மலேசிய தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

2018-08-20 19:31:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-மலேசிய தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய தலைமை அமைச்சர் மகாதீரும் சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கும்  20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மலேசியாவுக்கான நட்புறவுக் கொள்கையைச் செயல்படுத்தும் சீனா, மலேசியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டுறவின் நிலையான சீரான வளர்ச்சியை முன்னேற்றிச் செல்ல விரும்புகிறது என்று லீ கெச்சியாங் கூறினார்.

சீன-மலேசிய தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, நிதி, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சீன-மலேசிய தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

மலேசிய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு மகாதீர்  மேற்கொண்டுள்ள முதல் சீனப் பயணம் இது என்பதும், ஆசியான் நாடுகளைத் தவிர, அவர் பயணம் மேற்கொண்ட முதல் நாடு சீனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்