சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்திற்கு தயாராகிறது பெயஜிங்

மதியழகன் 2018-08-22 16:56:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018ஆம் ஆண்டு பெய்ஜிங் உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 3, 4 ஆகிய நாட்களில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

சீனா இவ்வாண்டில் வெளியுறவுத் துறையில் நடத்தும் மிகப் பெரிய அளவிலான நிகழ்ச்சியாக இந்த உச்சி மாநாடு விளங்குகிறது. இதற்காக, பெய்ஜிங் தயார் நிலையில் இருப்பதாக என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த மாநாடு பற்றி அவர் விரிவாகக் கூறுகையில்:

சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளுக்கிடையேயான உயர்நிலை பேச்சுவார்த்தையின் துவக்க விழா செப்டம்பர் 3ஆம் நாள் காலை நடைபெறும். பிறகு அன்று மாலை,  உச்சி மாநாட்டின் துவக்க விழா நடைபெறும். அப்போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தி, ஆப்பிரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவதன் புதிய கருத்துக்களை விளக்குவதோடு, ஆப்பிரிக்காவுடன் பயனுள்ள ஒத்துழைப்புக்கான புதிய நடவடிக்கைகளையும் அறிவிப்பார். இந்த புதிய நடவடிக்கைகள், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை விரைவுப்படுத்தி, இரு தரப்புக்கிடையேயான பன்முகமான நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவுக்கு புதிய உந்து சக்தியை அளிக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்ததாக 4ஆம் நாள், சீன-ஆப்பிரிக்க தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில், சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சி, இரு தரப்பும் கவனம் செலுத்தும் சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து, அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர். மேலும், சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தை நெருக்கமாக உருவாக்கும் நோக்கிலான பெய்ஜிங் அறிக்கை, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் செயல்பாட்டுத் திட்டம் ஆகிய முக்கிய ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்