அறிவுசார் சொத்துரிமைக்கான மாநாட்டிற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

மதியழகன் 2018-08-28 11:46:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அறிவுசார் சொத்துரிமை தொடர்பான உயர்நிலை மாநாடு செவ்வாய்கிழமை 28ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டிற்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அறிவுசார் சொத்துரிமை முறைமை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கும். அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை உறுதியாக கடைப்பிடித்து வரும் சீனா, சட்டப்படியாக அனைத்து தொழில் நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமையைப் காப்பதன் மூலம் தொழில் புரிவதற்கும் புதுமையாக்கம் செய்வதற்கும் நல்ல சூழ்நிலையை அளிக்கும். மேலும், பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒத்துழப்பை அதிகரித்து, அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை முன்னெடுத்து, பல்வேறு நாடுகளின் பொது மக்களுக்கு பயனடையச் செய்ய வேண்டும் என்று விரும்புதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்