சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு

மோகன் 2018-08-28 19:27:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர் பிரான்சிய் கெர்ரியைச் சந்தித்துரையாடினார்.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு சந்தை பொருளாதாரத்தின் அடிப்படையாகும். புதுமை வளர்ச்சியின் இன்றியமையாத தேவையாகவும் விளங்குகின்றது. பொருளாதார உயர் தர வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் சீனா இருக்கின்றது. அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, உலக அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

சீனாவின் அறிவுசார் சொத்துரிமைக்கான உயர் நிலை பாதுகாப்பு அமைப்பு முறையை கெர்ரி வெகுவாக பாராட்டினார். அதோடு, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலம் பல தரப்புவாதத்தை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு பேணிக்காத்து, அறை கூவல்களை கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்