சீன-ஆப்பிக்க கூட்டு வளர்ச்சி பற்றிய சீனா கருத்து

தேன்மொழி 2018-09-03 15:23:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிக்க கூட்டு வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவரின் உரை

சீன-ஆப்பிக்க கூட்டு வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவரின் உரை

சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் உயர் நிலைப் பேச்சுவார்த்தையும், 6ஆவது சீன மற்றும் ஆப்பிரிக்கத் தொழில் முனைவோர்கள் மாநாடும் 3-ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்துகொண்டு, “செல்வத்தை நோக்கி இணைந்து நடைபோடுவோம்”என்ற தலைப்பில், உரைநிகழ்த்தினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கெடுப்பதை சீனா ஆதரித்து, ஆப்பிரிக்காவுடனான பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர் உரைநிகழ்த்தியபோது தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஜோஹன்னஸ்பர்க் உச்சி மாநாட்டில், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக, பத்து முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் முன்வைக்கப்பட்டன. தற்போது வரை, இந்த திட்டப்பணிகள் மூலம், பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. இவை, ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை அளித்து வருகிறன என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஆழந்த பாரம்பரிய நட்பு உள்ளது. தற்போது, இரு தரப்புகளும் கூட்டாக வளரும் நல்ல கூட்டாளிகளாக இருக்கிறன என்று அவர் கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தின் முக்கியப் பகுதியாக, ஆப்பிரிக்கா திகழ்கின்றது. ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் சமத்துவ அடிப்படையில், கூட்டுக் கலந்தாய்வு மற்றும் கூட்டுக் கட்டுமானம் என்ற கொள்கையை நிலைநிறுத்தி, ஆப்பிரிக்க நாடுகளுடன் பன்முக இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், கொள்கைத் துறை பரிமாற்றம், வசதிகளின் தொடர்பு, தங்கு தடையற்ற வர்த்தகம் முதலியவற்றைத் தூண்டி, தத்தமது நாட்டின் நிலைமைக்கு ஏற்ற தரமிக்க வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக ஷச்சின்பிங் தெரிவித்தார்.

சீன-ஆப்பிக்க கூட்டு வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவரின் உரை

சீன-ஆப்பிக்க கூட்டு வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவரின் உரை

தவிர, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் தொழில் முனைவோர்கள், சீனாவில் முதலீடு செய்வதை சீனா வரவேற்பதோடு. சீனத் தொழில் முனைவோர்கள் ஆப்பிரிக்காவில் அலுவலை வளர்ப்பதற்கும் ஊக்கம் அளித்து வருகின்றது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இந்நிலைமையில், சீன மற்றும் ஆப்பிரிக்க தொழில் முனைவோர்களுக்கு 4 ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். முதலாவதாக, சீனா மற்றும் ஆப்பிரிக்காவில் காலூன்றி நின்று, தொலைநோக்கு ரீதியில், சீன மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்களுடன் இணைந்து கூட்டாக வளர வேண்டும். இரண்டாவதாக, நவீன தொழில் நுட்ப சாதனைகளைப் பயன்படுத்தி, பாரம்பரிய தொழில்துறையை புதுப்பிப்பதோடு, நுண்ணறிவு தொழில் துறையின் வளர்ச்சியையும் தூண்ட வேண்டும். மூன்றாவதாக, சமூக கடமையை நிறைவேற்றி, உள்ளூர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளித்து, தொழில் நிறுவனத்தின் நற்பெயருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடைசியாக, வர்த்த ஒத்துழைப்பு மேற்கொள்ளும்போது, சீன மற்றும் ஆப்பிரிக்க நட்பின் சங்கிலித்தொடர் மீது கவனம் செலுத்த வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்