சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாடு துவக்கம்

2018-09-04 08:56:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாடு துவக்கம்

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாட்டின் துவக்க விழா, 3ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 53 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள், ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மோச ஃபாகி, 27 சர்வதேச மற்றும் ஆப்பிரிக்க அமைப்புகளின் பார்வையாளர்கள் ஆகியோர், இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர். ஷிச்சின்பிங் இதில் தலைமை உரை நிகழ்த்தினார்.

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாடு துவக்கம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் பேசுகையில், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி கொண்ட ஒரு தனிச்சிறப்பு மிக்க வளர்ச்சிப் பாதையை சீனாவும், ஆப்பிரிக்காவும் மேற்கொண்டு வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள், தங்களது நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதைக்கான ஆராய்ச்சியிலும், ஆப்பிரிக்காவின் உள் விவகாரங்களிலும் சீனா தலையிடாது. மேலும், ஆப்பிரிக்காவின் மீது சீனாவின் கருத்துகள் வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டோம். மூன்றாவதாக, ஆப்பிரிக்காவுக்கு உதவியளிக்கும் போது, அரசியல் நிபந்தனையை அதிகரிக்க மாட்டோம். தவிர, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் ஈட்ட மாட்டோம் என்றார் அவர்.

2015ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஜோஹன்னஸ்பார்க் உச்சி மாநாட்டிற்கு பிறகு, இரு தரப்புகளுக்கிடையே 10 பெரிய ஒத்துழைப்புப்  திட்டங்களை சீனா விரிவாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 6,000 கோடி அமெரிக்க டாலர் நிதி ஆதரவு அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையில், இருப்புப் பாதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்கள் ஆகியவை அடுத்தடுத்து கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. அறிவியல், கல்வி, வறுமை குறைப்பு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புப் பணிகளும் செயலுக்கு வந்துள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, அடுத்த 3 ஆண்டுகளில் 8 துறைகளில் முக்கியமான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்றும் ஷி ச்சின்பிங் அறிவித்துள்ளார்.

தொழில்துறை முன்னேற்றம், வசதிகளின் இணைப்பு, வர்த்தகம், பசுமை வளர்ச்சி, ஆற்றல் கட்டுமானம், சுகாதாரம், பண்பாட்டுத் துறை பரிமாற்றம், அமைதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்தழைப்பு ஆகியவை இவற்றில் அடங்கும். இதற்காக, அரசு நிதியுதவி, நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் முதலீடு முதலிய வழிமுறைகளில் சீனா ஆப்பிரிக்காவுக்கு 6000 கோடி அமெரிக்க டாலர் உதவியை வழங்க உள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்