அமெரிக்காவின் புதிய கூடுதல் வரி வசூலிப்புக்கு சீனா உரிய நடவடிக்கை மேற்கொள்வது உறுதி

வாணி 2018-09-06 18:50:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன வணிகப் பொருட்களின் மீது கூடுதல் சுங்க வரி வசூலிப்பது பற்றி அமெரிக்கா அண்மையில் பொது மக்களிடையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்நடவடிக்கை மேற்கொள்வதென அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது பற்றி சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபங் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில்,

அமெரிக்காவின் கூடுதல் வரி வசூலிப்புக்கு சீனா உரிய நடவடிக்கை மேற்கொள்ள நேரிட்டது என்று தெரிவித்தார்.

மேலும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இரு தரப்புகளும் தொடர்ந்து பரிமாற்றத்தையும் தொடர்பையும் நிலைநிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்